நெதர்லாந்து வாலிபரை கரம் பிடித்த கோவை பெண்...

published 1 day ago

நெதர்லாந்து வாலிபரை கரம் பிடித்த கோவை பெண்...

கோவை: கோவை, மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா, இவர் நெதர்லாந்து நாட்டில் உள்ள நிஜ்வேர்டால் என்ற பகுதியில் சி.டி.எஸ்.ஐ.டி  நிறுவனத்தில் நிர்வாகம் மேலாளராக பணியாற்றி வந்து உள்ளார்.

அப்போது நெதர்லாந்து நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்ட பின்னர் அது காதலாக மாறியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கோவை இடிகரை அருகே தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. முறைப்படி அக்னி சாட்சியாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடைபெற்ற இந்த திருமணத்தில் நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் தமிழரின் பாரம்பரிய வேட்டி மற்றும் சேலைகளை அணிந்தவாறு திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/uU4twofG7D8

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe