பொங்கலுக்கு பளீச்... பளீச்... ஜொலிக்குது ரெஜிஸ்டர் ஆபீஸ்!

published 3 days ago

பொங்கலுக்கு பளீச்... பளீச்... ஜொலிக்குது ரெஜிஸ்டர் ஆபீஸ்!

கோவை: மழை நீர் வடிய, புதர்மண்டி பொதுமக்கள் செல்வதற்கே அச்சமடைந்து வந்த மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் பொங்கலை முன்னிட்டு சீரமைக்கப்பட்டு, ஜொலிக்கிறது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் மழைக்காலத்தின் போது அலுவலகத்திற்குள்ளேயே மழைநீர் கசியும். மேலும், கழிப்பறை சீரமைக்கப்படாமல், புதர் மண்டி உபயோகப்படுத்த முடியாத நிலையிலிருந்தது.

இதனால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் இயற்கை உபாதைகள் அவதியடைந்து வந்தனர்.

இதனிடைய சார் பதிவாளர் ராமமூர்த்தி, தனது முயற்சியால்,  ஆவண எழுத்தர்கள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன், கட்டடத்தின் மேற்பகுதியில் டைல்ஸ் ஒட்டி, நீர் கசியாமலும், கழிப்பறையும் சீரமைத்து பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். 

மேலும், கார், பைக் பார்க்கிங் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், சாய் தளம் உள்ளிட்டவற்றையும் அமைத்தார். தற்போது பொங்கலை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகம் பெயிண்ட் அடிக்கப்பட்டு, சீரியல் லைட் போடப்பட்டு ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள் வரவேற்று, ராம மூர்த்திக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe