கோவையில் கோவிலின் கூரையை உடைத்து கோவில் பொருட்களை நபர்- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

published 3 days ago

கோவையில் கோவிலின் கூரையை உடைத்து கோவில் பொருட்களை நபர்- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

கோவை: கோவை, இராமநாதபுரம் சண்முகாநகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கருபராயசுவாமி திருக்கோவிலில் கடந்த 5 ஆம் தேதி இரவு கோவிலின் கூரையை உடைத்து கோவிலுக்குள் இருந்த மின்சாதன பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மறுநாள் காலையில் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் கூரை உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து. அக்கம், பக்கதினரிடம் தெரிவித்த நிலையில், கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளுடன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்கானிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 5 ஆம் தேதி கோவிலில் கொள்ளை அடித்த சம்பவம் உறுதியானதை தொடர்ந்து நேற்று பாக்கியராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEuTuFpv4U2/?igsh=b3d5NjM1ZG5zbDk=

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe