கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களைகட்டிய பொங்கல் பண்டிகை- உறியடி, கயிறு இழுத்தல் என அசத்திய மாவட்ட ஆட்சியர்...

published 5 hours ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் களைகட்டிய பொங்கல் பண்டிகை- உறியடி,  கயிறு இழுத்தல் என அசத்திய மாவட்ட ஆட்சியர்...

கோவை: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை பொங்கல் பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பொங்கல் வைத்து வழிபட்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடர்ந்து உறியடி கயிறு இழுத்தல் என பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி அசத்தினார். அவருடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனும் இணைந்து கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டார். ஒரு புறம் ஆண் அலுவலர்களும் மறுபுறம் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பெண் அலுவலர்களும் கலந்து கொண்டு கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாலை வரை பல்வேறு துறை அலுவலர்கள் இணைந்து நடனமாடுதல் பாடல் பாடுதல் உறியடி போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe