மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம் : தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

published 2 years ago

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம் : தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை : மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு  கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்  மேட்டுப்பாளையத்திலிருந்து நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை கோடைகால  வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இன்று காலை7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.

அதே சிறப்பு ரயில் நேற்று இரவு7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில்  இருந்து புறப்பட்டு ரயில் கோவை பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர்  வழியாக திருநெல்வேலிக்கு புறப்பட்டது.

இதுவரை நேரடியாக தென் மாவட்டங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் சேவை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது முதன் முதலாக மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டமான திருநெல்வேலிக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது  பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள்  இந்த ரயில் பயணிகளுக்கு இனிப்பு  வழங்கி வரவேற்பு தெரிவித்துக் கொண்டாடினர் .

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க முதல் நாளே 80 சதவீதம் பேர் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe