உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

published 1 week ago

உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

கோவை: பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. 

இச்சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது ஐந்து 
உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும்.

உள்புகார் குழு தலைவராக பெண் அலுவலர் நியமிக்க வேண்டுமெனவும், மேலும் இக்குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாகவும் மற்றும் ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் பற்றி நன்கு அறிந்தவராகவோ, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.

இதுவரை உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அத்தகவல்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களின் மீது பணியிடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ன் கீழ் ரூ.50,000/- அபராதம் விதிக்கப்படும்.

உள்புகார் குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆண்டு அறிக்கையினை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe