மாங்கரை தரைப்பாலம் 'டோட்டல் டேமேஜ்'.. புனரமைக்கக் கோரிக்கை..!

published 2 years ago

மாங்கரை தரைப்பாலம் 'டோட்டல் டேமேஜ்'.. புனரமைக்கக் கோரிக்கை..!

கோவை: கோவையில் பெய்த கனமழையில் மாங்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது. 

கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரப் பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

பல்வேறு மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து ஆனது பாதிக்கப்பட்டது.இந்நிலையில் கோவை தடாகம் சாலை மாங்கரை பகுதியில் தைல மரம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலமானது மழை நீரால் முழுவதுமாக சேதம் அடைந்தது. 

அதன் ஒரு பகுதி முழுவதுமாக மழையில் அடித்துச் செல்லப்பட்டு மழை நீர் தேங்கியதால் எதிரெதிர் புறங்களில் வந்த வாகனங்கள் அதனை கடக்க முடியாமல் நின்றன. 

பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழை நீர் தேங்கி நின்ற இடத்தில் மண்ணை கொண்டு நிரப்பிய பின்பு போக்குவரத்து துவங்கியது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe