கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
யுகாதி பண்டிகை வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்து கொண்டார் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே இரண்டு ரயில்கள் சென்று கொண்டிருக்கிறது, மூன்றாவது ரயில், திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை போன்ற ரயில் செல்லாத இடங்களை இணைக்கிறது என்றார். ரயில் சேவை இல்லாத இடங்களுக்காகவே அந்த ரயில் விடப்பட்டிருக்கிறது என்றும் திருவாரூர் மக்கள் பல ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அது நிறைவேறி இருக்கிறது என்றார். அதேபோல கோவை- ராமநாதபுரம் ராமேஸ்வரத்தை இணைக்க ரயில் சேவை வேண்டும் என்பதை மத்திய அமைச்சரிடம் கோரிக்கையாக வைத்து வந்திருக்கிறோம் என்றார்.
கரூரிலிருந்து 99 கிலோ மீட்டருக்கு ஆறு வழிச்சாலை , அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை என்றுன் நிலம் கையகப்படுத்தும் ரிவ்யூ கமிட்டிக்கு ப்ரோபோசல் அனுப்பப்பட்டு இருக்கிறது கமிட்டி அப்ரூவல் கொடுத்ததற்கு பிறகு பண்ட் அப்ரூவல் செய்வார்கள், அதற்குப் பிறகு மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளை நியமித்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றார். இப்பகுதி தொழில்துறையை மையமாகக் கொண்டதால் மத்திய அரசு அதை ஒருபோதும் நிராகரிக்காது. இது ஒரு காஸ்ட்லியான ப்ராஜெக்ட் என்பதால் நிறைய நிதி ஒதுக்கி செய்யப்பட வேண்டும், அதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது எனக் கூறினார்.
தேசிய தலைவர் நட்டாவாக இருக்கட்டும், உள்துறை அமைச்சர் ஆக இருக்கட்டும், அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷமாக இருக்கட்டும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தொண்டர்களுடைய கருத்தை ஒரு தலைவராக நான் பிரதிபலித்திருக்கிறேன். தமிழ்நாடு அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பதை நான் பிரதிபலிக்கிறேன். நேற்று Cvoter கணிப்பு போட்டார்கள், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு 27% தான் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளும் சதவீதம் இருக்கிறது. இந்தியாவின் ஒரு மாநிலத்தினுடைய எவ்வளவு மோசமான முதலமைச்சராக இருந்தாலும், 43% ஆவது இருப்பார்கள். நல்ல முதல்வராக இருந்தால் 65% செல்வார்கள். நான்கு பேரில் மூன்று பேர் அவரை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றார். இதையே தான் எங்களுடைய கள ஆய்வும் சொல்லுகிறது, தமிழகத்தை பொறுத்தவரை நம்முடைய கூட்டணி கட்சிகள் எவ்வாறு இருக்கிறது, தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து ஜோன்களிலும் ஒரே மாதிரியான ஓட்டுக்கள் மக்கள் போட மாட்டார்கள் என கூறிய அவர் வாக்கு செலுத்துவதில் தென் வேறு, கொங்கு வேறு, டெல்டா பகுதி வேறு. தமிழகத்தில் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டும் என்றால் ஐந்து மண்டலங்களில் மூன்று மண்டலங்களில் ஜெய்க வேண்டும் என்றார். தமிழகத்தில் ஒருவர் ஆட்சிக்கு வருகிறார் என்றால் ஐந்தில் மூன்று மண்டலங்களை ஜெயிக்காமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. அதிகமான சீட்டுகள் பெற வேண்டும் என்றால் நான்கு மண்டலங்களை நிச்சயம் ஜெயிக்க வேண்டும், அதனால் என்னுடைய வேலை இந்த கட்சியின் தலைவனாக, தொண்டனாக 234 தொகுதிகளின் தன்மை எப்படி என்பதை ஆழ்ந்து ஆராய வேண்டிய கடமை என்னிடம் உள்ளது என்றார்
ஜாதிகள் வேண்டாம் என்று நினைக்கிறோம், ஆனால் வாக்கு செலுத்துவதில் ஜாதிகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. நான் டெல்லியில் என்ன பேசினேன் என்பதை பத்திரிக்கை நண்பர்களிடம் சொன்னால் அது தவறாக சென்று விடும், மிகவும் ஆழ்ந்து, ஆழமாக ஆதாரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எப்படி இருக்கிறது நாம் எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை, மக்களின் நலன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அங்கு பேசியிருக்கிறோம் என்றார். கூட்டணியை பற்றி எந்த வார்த்தையும் நான் இங்கு பேச விரும்பவில்லை, கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் நிச்சயம் கூறுவர். என்னை பொருத்தவரை தமிழகம் நன்றாக இருக்க வேண்டும், பாரதிய ஜனதா கட்சி தங்கு தடை இன்றி வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. எனக்கு எந்த ஒரு கட்சியின் மீதோ தலைவரின் மீதோ தனிப்பட்ட கோபம் கிடையாது, நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. எனக்கு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழகத்தின் நலன் மிகவும் முக்கியமானது என்றார். அண்ணாமலை அரசியலுக்கு வந்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும்தான் என்றார். கூட்டணி குறித்து விரைவில் பார்ப்பீர்கள் அதேபோல தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரைவில் பார்ப்பீர்கள். இங்கு நடக்கக்கூடிய விஷயங்களை அக்யூரிட்டாக தலைவர்களிடம் கூறினால் மட்டும்தான் அவர்களால் தெளிவான முடிவு எடுக்க முடியும் என்றார்.
உயர் தலைவர்கள் எல்லா சூழ்நிலைகளையும் பார்த்து முடிவெடுப்பார்கள் என்று கூறினார். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார், ராமேஸ்வரம் ராமநாதபுரத்திற்கு வருகிறார். ஐந்தாம் தேதி இலங்கை செல்லும் அவர் இலங்கையிலிருந்து நேரடியாக ராமேஸ்வரத்திற்கு வருகிறார். அது முடிந்த பிறகு மண்டபத்திற்கு வருகிறார். அங்கு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதன் பிறகு ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். அதன் பிறகு கவர்மெண்ட் பப்ளிக் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்காக அறிவித்துவிட்டு மதுரையிலிருந்து டெல்லி செல்கிறார். 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதல் விசிட்டாக இருக்கிறது. அரசியலில் என்ன நடக்க வேண்டும் எப்பொழுது நடக்க வேண்டும் என்பதெல்லாம் சரியான நேரத்தில் நிச்சயம் நடக்கும் எனக் கூறினார்.
என்னை பொறுத்தவரை நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன்., என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. அதேபோல் வருடா வருடம் மாற்றி மாற்றி பேசுபவன் அண்ணாமலை கிடையாது என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்களே என்ற கேள்விக்கு,
நான் யாரையும் கடுமையாக விமர்சிக்கவில்லை, கருத்துக்களை கருத்துகளாகவே முன் வைத்திருக்கிறேன். ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிலிருந்து முதலமைச்சர் வரை என்னுடைய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன் என்றார். எனக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் என்ன பங்காளி சண்டையா இருந்தது ?. கருத்துக்களை கருத்துக்களாக எதிர்கொண்டு இருக்கிறேன். வேறு மாநில அரசியலாக இருந்தாலும் தமிழக அரசியலாக இருந்தாலும், கருத்துக்களை வலிமையாக சொல்லியிருக்கிறேன் என்று தான் கூற வேண்டும் என்றார்.
அதிமுக தலைவர்கள் பாஜக தலைவர்களை புகழ தொடங்கி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தலைவரும் மற்ற தலைவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்ற கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள், ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை என்பதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்றார். டெல்லிக்கு செல்லும் விமானத்தில் தமிழகத்திலிருந்து யார் ஏறினாலும் அவர்கள் பாரதிய ஜனதா தலைவர்களை சந்திக்க தான் செல்கிறார்கள் என மீடியாக்காரர்கள் தான் கூறுகிறார்கள். செங்கோட்டையன் பயணத்தை எடுத்துக் கொண்டாலும், அதைத்தான் செய்தார்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு திரை மறைவில் செய்ய வேண்டிய காரியங்கள் எதுவுமே கிடையாது. நாங்கள் எப்பொழுதுமே வெளிப்படையாகவே தான் இருக்கிறோம். காங்கிரசை போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசியலை கட்டுப்படுத்துவது போல் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சரித்திரமே சாட்சி என்று கூறினார்.
செங்கோட்டையன் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, பதிலளித்த அவர் விஜய்க்கு இன்று பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற ஆட்சிக்கும் விஜய்க்கும் ஒரு தனிப்பட்ட உடன்படிக்கை இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அவர் பாரதிய ஜனதா கட்சியின் மீது ஆக்ரோஷமான கருத்துக்களை வைத்தார் பதிலுக்கு நாங்களும் கருத்துக்களை வைக்கிறோம். அதற்கும் இந்த பாதுகாப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. தமிழ்நாட்டில் மாநில அரசு செக்யூரிட்டி கொடுக்காமல் இருக்கும் நிலையில் அதை மத்திய அரசு கையில் எடுப்பதாக தான் நான் பார்க்கிறேன் என்றார்.
இன்றைய நாளில் அரசியல் கட்சிகள் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டால் மக்களுக்கு சவுரிகமாக இருக்கும் என்றும் விஜயாக இருந்தாலும் கூட அரசியலுக்கு எதற்காக வந்திருக்கிறார், யாரை எதிர்க்கிறார், என்ன காரணத்திற்காக அரசியல் செய்கிறார் என்பதன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தற்போது விஜய் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நாங்கள், திமுகவையும் எதிர்க்கிறோம் இப்படித்தான் எதிர்க்கிறோம்.
மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்ட நிதியை ஒதுக்கவில்லை என போராட்டம் முன்னெடுத்தார்களே என்ற கேள்விக்கு,
இங்க இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு ஏமாற்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கொடுக்கும் டேட்டாவின் மூலம் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்கள் இந்தியாவில் உள்ளது. தமிழ்நாட்டில் இருப்பதைவிட பின் தங்கிய கிராமப்புறங்கள் நிறைய உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நிதி,
ஆந்திராவைப் பொறுத்தவரை 4 ஆண்டுகளில், 30 ஆயிரத்து 63 கோடி..
தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலமான பீகாருக்கு - 24,726 கோ, குஜராத்துக்கு நான்கு ஆண்டுகளில்,- 6613 கோடி மட்டும் தான் , கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் கடந்த நான்கு ஆண்டுகளில்- 23 ஆயிரத்து 2226 கோடி, கேரளாவிற்கு 13 ஆயிரம் கோடி, மத்திய பிரதேசத்தை 26,000 கோடி, ஒரிசாவிற்கு 18000 கோடி, ராஜஸ்தானிற்கு 38 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டை விட நான்கு மடங்கு மக்கள் தொகை கிராமங்கள் கொண்ட உத்தரபிரதேசத்திற்கு நான்கு ஆண்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தொகை- 38 ஆயிரம் கோடி ரூபாய்., தமிழ்நாட்டிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 39 ஆயிரத்து 333 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் சரித்திர கணக்கு ஏமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. யாரு பெயரில் போலிக்கணக்கு எழுதி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உத்திரபிரதேசத்தில் 24 கோடி மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 8.5 கோடி மக்கள் தான் வசிக்கிறார்கள் , அப்படியானால் எவ்வளவு பணம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கனிமொழி பார்லிமென்டில் பேசமாட்டார்களா?.. பீகாரில் கிராமப் பகுதிகளை எடுத்துக்கொண்டால், 9%.. மத்திய பிரதேசத்தில் 5%, உத்திரபிரதேசத்தில் 15 சதவீதம், தமிழ்நாட்டில் மூன்று புள்ளி ஏழு கோடி. மக்கள்தான் வசித்து வருகிறார்கள், அப்படியானால் இடையில் யார் பணத்தை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றார். இவ்வளவு டேட்டா க்ளியர் ஆக இருக்கும்போது இடையில் யார் பணத்தை சாப்பிடுகிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.. போலி கணக்கு எழுதுவது வராதவர்களின் பெயரில் கணக்கு எழுதுவது, திமுக கூட்டத்திற்கு குரூப் குரூப்பாக கூட்டிக்கொண்டு சென்று கணக்கு எழுதுவது, என டாஸ்மாக் ஊழலை விட மிகப்பெரிய ஊழலாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் இருக்கிறது. இதில் திமுகவின் உடைய பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஜெயிலுக்கு போவார். இவர்கள் எல்லாம் போக வேண்டும் என்றால் திகார் போல நாலு ஜெயில்கள் கட்ட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில், சம்பளம் வேலைக்கான மெட்டீரியல் இரண்டையுமே மத்திய அரசு கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு குளம் வெட்ட வேண்டும் என்றால், ஆட்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும், அந்தக் குளம் வெட்டுவதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கக்கூடிய சம்பளம் 87% சதவீதம் சம்பளம் பாக்கி என்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் போலி கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் போலி கணக்கு எழுதுகிறீர்கள் என்பதால் தான் ஆட்கூலி அதிகமாகவும், உபகரண செலவு கம்மியாகவும் ஆகிறது. இதையெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் ஆகவும் ஆதாரமாகவும், ஈரோட்டில் ஒரு பஞ்சாயத்தை உதாரணத்திற்கு எடுத்து, கணக்கு காண்பித்து கடினமாக எழுதி இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை, மத்திய அரசு ஒரு சிறப்பு அதிகார குழுவை போட்டு, கொடுக்கப்பட்ட 39,000 கோடி ரூபாய் ஆடிட் செய்து, பணம் திருடிய பெருச்சாளிகளை கைது செய்து, இதற்காகவே மத்திய அரசு தன் செலவில் சிறைச்சாலைகளை கட்டி அவர்களை உள்ளே அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகுதான் அடுத்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
கிராம சபை கூட்டம் என, மக்களை அழைத்து மோடிக்கு எதிராக கொடிபிடிக்க வைக்கிறார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊழலை பத்திரிக்கையாளர்கள் பெரிய அளவில் பேச வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன். இதில் அரசியல் பேசினாலும் இது ஏழை மக்களுக்கு சொல்ல வேண்டிய காசு என்று கூறினார்.
கம்ப்யூட்டர் டெக்னாலஜி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என போடப்பட்டிருந்தது குறித்தான கேள்விக்கு, அதில் அன்பில் மகேஷின் பினாமி கம்பெனி அதில் இருக்கிறது. இவர்கள்தான் CBI Prosecution sanction பிடுங்கி வைத்திருக்கிறார்களே, சவுக்கு சங்கர் விஷயமெல்லாம் இதில் சம்பந்தப்பட்டதுதான். சவுக்கு சங்கரின் விஷயத்தில் மத்திய அரசின் நமஸ்தே என்ற திட்டமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதில் யாரெல்லாம் தூய்மை பணியாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்களை ஓனராக்கக்கூடிய திட்டம். காஞ்சிபுரம் சென்னை என இரண்டு கோஆப்பரேட்டிவ் பங்குகள் அதில் உள்ளது. இரண்டு பங்குகளிலும் போலித்தனமாக அக்கவுண்டுகள் ஆரம்பித்து, போலித்தனமாக பணங்களை எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்பதை நான் காட்டுகிறேன் என்றார். மத்திய அரசின் பணமாக இருந்தாலும், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஊழல் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் இதை விசாரிக்க சிபியை உள்ளே வர முடியவில்லை. அதனால் நிச்சயமாக இதை வெளியே எடுத்து போராடத்தான் போகிறோம். அதனால்தான் முதலமைச்சருக்கு C voter-ல் 27% அதிகம் என்று கூறினார்.
மற்ற கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளர்களை கூறிவிட்டார்கள், ஆனால் பாரதிய ஜனதா கட்சியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தெரியாது. அப்படி இருந்தும் பாரதிய ஜனதா கட்சி நான்காவது இடத்தில் வந்திருக்கிறது என்றால் இதை சரித்திரமாக தான் பார்க்கிறோம் என்றார்.
நம்மளுடைய முதலமைச்சரை எடுத்துக் கொண்டால், டேட்டாவை கையில் வைத்துக் கொள்வார், எந்த வருடத்தில் எது குறைந்து இருக்கிறது என பார்த்துக் கொள்வார் என்றும் 2011-ல் சட்டம் ஒழுங்கு சீர் கட்டு இருக்கிறது என்று கூறுவார்...
நான் முதலமைச்சரை பார்த்து கேட்கிறேன் சட்டம் ஒழுங்கில் வெள்ளை அறிக்கை ஏன் கொடுக்கவில்லை. 2022 ம் ஆண்டு, NCRB டேட்டாவை பார்த்தால் ஒரே ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 8.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு அபிஷியல் டேட்டாவை கொடுக்கப்படவில்லை. அதனால் முதலமைச்சர் எந்த டேட்டாவை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை என்றார். இவர்களுடைய ஆட்சி வந்ததற்கு பிறகு குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது, இதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் டேட்டா கொடுத்தால் அதை பப்ளிஷ் செய்ய வேண்டியது தான் எங்களுடைய வேலை. டேட்டாவே இல்லாமல் எப்படித்தான் பதில் கூறுவது ? என்றார். சீமான் அவர்களை நான் பாராட்டுகிறேன், அவருடைய கொள்கை வேறு அவர் எதிர்க்கிறார். பாரதிய ஜனதா கட்சியை நானே பாராட்டிக்கொள்கிறேன். எங்கள் கொள்கைகள் வேறு அதனால் நாங்களும் எதிர்க்கிறோம். நீதி கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கையில் தானே இருக்கிறார்கள். அவர்கள் புதிதாக என்ன கொண்டு வருகிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி. அதனால் நாங்கள் மிகவும் தைரியமாக இருக்கிறோம் தேசிய ஜனநாயக கூட்டணி வரக்கூடிய தேர்தலில் பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை கொண்டுவரும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. முதலமைச்சர் இன் அப்ரூவல் ரேட்டிங்கே 27 சதவீதம் தான் இருக்கிறது என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உடைய எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய கட்சி தொண்டர்களால் அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அந்தக் கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நான் என்றுமே செல்ல விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி எதற்காக மற்றொரு கட்சியின் பிரச்சனையில் தலையிட வேண்டும். அதை எங்கள் வேலையே கிடையாது என்றார். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சென்று அவராக சந்தித்து பேசிவிட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சி இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால் பாரதிய ஜனதா கட்சி அழிந்துவிடும் என்பதை நான் 2021 இல் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆர்கானிக் வளரக்கூடிய குரோத் மட்டுமே பாலிடிக்ஸ் நிக்கும். நாங்கள் யாரையும் அழித்தோ, manipulate செய்தோ நிச்சயம் நாங்கள் வரமாட்டோம் என்று கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக தமிழகத்தில் அதிக போராட்டங்களை நடத்தியவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர். திமுகவுக்கு எதிரான 1440 கோடி ரூபாய் டிபர்மேஷன் கேஸ் என்மீது உள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி தலைவரின் மீது அதிக எஃப் ஐ ஆர் பதியப்பட்டது என்றாலும் அது என் மீதுதான். எனக்கு போடப்பட்ட எஃப் ஐ ஆர் இ ஒரு பத்து சதவீதம் கூட எனக்கு பின்னால் இருக்கும் மற்ற கட்சிக்காரர்கள் மீது போடப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழலை தினம் தோறும் பேசிக் கொண்டிருப்பது யார்? இதில் மாமனார் பணம் இருக்கிறது வாய்க்கொழுப்பு பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள், உயிரை துச்சம் என மதித்து ஐபிஎஸ் பணியில் இருந்தவன் நான். இதுவரை தனியார் நிறுவனத்தில் நான் ஒரு ரூபாய் கூட சம்பாதித்தது கிடையாது, நான் மக்களுக்காக சர்வீஸ் செய்வதற்காக சென்றவன். என்னுடைய சொந்த நிறுவனத்தில் இருந்து கூட மாச சம்பளத்தை நான் வாங்குவது கிடையாது என்றார். ஒரு நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே நான் இருக்கிறேன். அப்படி இருக்கையில் என் மீது எப்படி கருத்து வைக்க முடியும். பத்தாண்டு காலங்களில் மக்களின் வரிப்பணத்தை மட்டுமே என்னுடைய சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன். இன்று வரை நான் வாழ்ந்த வாழ்க்கையை பாடமாக உங்கள் முன் வைக்கிறேன். ஐபிஎஸ் பேட்ச்லும் நான் கடைசியானவனாக வரவில்லை, அத்தனை பேரில் நான் இரண்டாவது ஆளாகத்தான் தேர்ச்சி பெற்று வந்திருக்கிறேன். 150 பேர் இருக்கக்கூடிய ஐபிஎஸ் ஆபீசர்களின் இரண்டாவது ரேங்கில் நான் இருக்கிறேன். எதற்காக நான் அந்த ஒன்பது வருடங்களை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். எனக்கு எந்த காட்பாதரும் கிடையாது, சுயமாக உழைத்து சுயம்புவாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.