கோவை குற்றாலம் நாளை விடுமுறை…

published 1 month ago

கோவை குற்றாலம் நாளை விடுமுறை…

கோவை: கோவை நகர் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கோவை குற்றாலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாணி மலைத் தொடரின் அடிவாரத்தில் வனப்பகுதி நிறைந்த இடமாக இருப்பது கோவை குற்றாலம், நீர்வீழ்ச்சி அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தினம் தோறும் அலை மோதி காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கோடை வெயில் காரணமாகவும், விடுமுறையின் பொழுது சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இங்கு வந்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கொண்டாடி மகிழ்வார்கள்.

கோவை நகருக்கு அருகில் அமைந்து உள்ளதால் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. கோடை வெயில் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் வர இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என வனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

இதனால் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி செல்லும் சாலை பராமரிப்பு பணிகளை தற்பொழுது வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக நாளை புதன்கிழமை 9 ம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனவும், மேலும் மறுநாள் வியாழக்கிழமை பத்தாம் தேதி அன்று வழக்கம் போல் வேலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என கோவை மாவட்ட வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe