முதல்வர் திறந்து வைத்தும் ஒப்படைக்கப்படாத சாவி- பூட்டை உடைத்த பொதுமக்கள்- உக்கடத்தில் பரபரப்பு...

published 6 days ago

முதல்வர் திறந்து வைத்தும் ஒப்படைக்கப்படாத சாவி- பூட்டை உடைத்த பொதுமக்கள்- உக்கடத்தில் பரபரப்பு...

கோவை: கோவை உக்கடம் CMC காலனியில் 520 துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்த இந்த நிலையில் மூன்று ஆண்டுகளக்குமு ன்பு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி அவர்களது வீடுகளை காலி செய்ய வைத்தனர்.  

அதனை தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புல்லுகாடு பகிதியில் தற்காலிகமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக சி எம் சி காலனியில் உக்கடத்தில் 222 வீடுகள், வெரைட்டி ஹால் ரோட்டில் 192 வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. இவற்றை கடந்தாண்டு அக்டோபர் மாதம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால்  தற்போது வரை பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படவில்ல.

மேலும் திமுக வார்டு நிர்வாகி ஆனந்தன் என்பவர் அங்கு வசிக்கும் மக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு குடும்பத்தில் இருவருக்கு வீடு ஒதுக்குவதற்காக திட்டம் தீட்டிக்கொண்டு பணத்தைப் பெற்றுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் இன்று தகர கொட்டகையில் வசிக்கும் துாய்மை பணியாளர்கள் கோவை உக்கடம் சி.எம் சி.காலணியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு  கட்டிடம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். பின்ன்ர் திடீரென ஸ்டாலின் தான் வராரு வீடு திறக்க போறாரு என்று கேலி செய்தவாறு ஆளுக்கு ஒரு வீட்டின் பூட்டை கல்லால் அடித்து திறந்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து அங்குவந்த உக்கடம் போலிசார் வீடுகளுக்குள்ளிருந்து பொதுமக்களை வெளியேற்றி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த மக்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறையின் வாகனத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து வேண்டும் வேண்டும் வீடு வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe