லாரியில் கடத்திய 7,525 லிட்டர் எரிசாராயம்...

published 3 days ago

லாரியில் கடத்திய 7,525 லிட்டர் எரிசாராயம்...

கோவை: அமலாக்கப்பிரிவு புலனாய்வு துறை மாநிலம் முழுவதும் சட்ட விரோத, போலி மதுபான வர்த்தகத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, போலி மதுபானம் தயாரிக்கும் கூடங்கள், எரிசாராயம் கடத்தல்கள், சட்ட விரோதமாக மது பானம் தயாரிக்கும் கூடங்கள் மற்றும் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

சமீபத்தில் கோவை சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 5,145 லிட்டர் எரிசாராயம் கோவை மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கோவை மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில், 7,525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து லாரி மற்றும் 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த எரிசாராயத்தை கர்நாடகா மாநிலம் தார்வடத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்தி வரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டு அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான தகவல்களை 10581 அல்லது 94984 - 10581 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம். அவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe