உக்கடம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதில் மோசடி?- பாதிகப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்...

published 1 week ago

உக்கடம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதில் மோசடி?- பாதிகப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்...

கோவை: உக்கடம் மேம்பால பணிகளுக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசித்து வந்தவர்களை மாநகராட்சி நிர்வாகம் காலி செய்தது. அப்போது அவர்களுக்கு சிஎம்சி காலனி பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதில் வீடுகள் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்திருந்தது. 

அதேசமயம் அப்பகுதியில் வசித்து வந்த குடும்பங்களுக்கு புல்லுக்காடு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து தரப்பட்டது. ஆனால் தகரக் கொட்டகைகளும் குறைவான எண்ணிக்கையிலேயே அமைத்து தரப்பட்டதால் சிலர் வாடகை வீடுகளில் வசித்து வந்தனர்.

தற்பொழுது மேம்பால பணிகள் முடிந்து சிஎம்சி காலனி பகுதியில் சுமார் 200 வீடுகளுடன் கூடிய அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலையில் 16 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரப்படவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அம்பேத்கர் படத்துடன் கண்டன முழக்கங்களை எழுப்பினர். வீடுகள் ஒதுக்கி தருவதில் அங்குள்ள அரசியல் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து அரசு அலுவலர்களும் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினர். 

அதில் ஒருவர் திடீரென கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe