ஓணம் பண்டிகை : கோவையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

published 2 years ago

ஓணம் பண்டிகை : கோவையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள்
அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்கள் விலை மிக உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் அதிகளவில் வந்துள்ளன.

கேரளவில் இருந்து வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.  இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1200 முதல் 1600 வரையும், முல்லை ஒரு கிலோ ரூ. 600 முதல் 800 வரையும், ஜாதிமல்லி கிலோ ரூ.580 வரையும்,  ரோஜா ரூ.200 முதல் 240 வரையும், செவ்வந்தி ரூ.240 முதல் 280 வரையும், வாடாமல்லி ரூ.100 முதல் 120, தாமரை
ஒன்று ரூ.7 முதல் 10, அரளி ரூ.200, சவுக்கு ஒரு கட்டு ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை யொட்டி விலை உயர்ந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது ஓணம் பண்டிகையையொட்டி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe