பாட்டியின் 106வது பிறந்த நாளுக்கு கிடா வெட்டி விருந்தளித்த கோவை குடும்பத்தார்

published 2 years ago

பாட்டியின் 106வது பிறந்த நாளுக்கு கிடா வெட்டி விருந்தளித்த கோவை குடும்பத்தார்

கோவை: கோவையைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது பாட்டியின் 106 பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அனைவரும் இணைந்து கிடா வெட்டி விருந்தளித்து கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றைய நவீன காலத்தில் நாம் நமது குடும்ப உறவுகளை மறந்து தனித்து வாழ துவங்கியுள்ளோம். நம்மை அன்பாய் வளர்த்த மூதாதையர்கள் பலர் இன்று முதியோர் இல்லங்களில் அன்புக்காக ஏங்கிய வண்ணம் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பாட்டியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளனர் கோவையில் உள்ள "வானத்தைப்போல" குடும்பம். 

கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். கடந்த 1917ம் ஆண்டு பிறந்த இவருக்கு 106 வயது  ஆகிறது. இதனைத்தொடர்ந்து அவரது பேரன் பேத்திகள் இணைந்து பாட்டியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர்.

தொடர்ந்து தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து, கேக் வெட்டி, குடும்ப புகைப்படம் எடுத்து பாட்டியின் பிறந்த நாளை கொண்டாடினர். இதனை தொடர்ந்து கிடா வெட்டி அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர். 

மேலும் பாட்டிக்கு பொன்னாடை போற்றி கிரீடம் வைத்து அழகு படுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மூன்று தலைமுறைகளை பார்த்த பாட்டியின் கால்களில் விழுந்து ஆசிபெற்றனர். 

தாய் தந்தையை முதியோர் இல்லங்களில் சேர்த்து வரும் சுயநல மனிதர் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பாட்டியின் பிறந்த தினத்தை கொண்டாடிய கோவை மக்கள் அனைவரது நெஞ்சங்களிலும்  நீங்கா இடம்பிடித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe