ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் ரியாக்டர் வெடித்து விபத்து.. 6 தொழிலாளர்கள் பலி, 11 பேர் கவலைக்கிடம் - ஆந்திராவில் சோகம்

published 2 years ago

ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் ரியாக்டர் வெடித்து விபத்து.. 6 தொழிலாளர்கள் பலி, 11 பேர் கவலைக்கிடம் - ஆந்திராவில் சோகம்

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் ரியாக்டர் வெடித்த விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டி கூடத்தில் போரஸ் என்ற பெயரிலான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கே நேற்று இரவு வழக்கம் போல் அங்கு 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் தொழிற்சாலையில் உள்ள நான்காவது யூனிட்டில் இரவு 2 மணி அளவில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக தொழிற்சாலையின் நான்காவது யூனிட் தீப்பற்றி எரிந்தது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உயிர் தப்பிக்க முயன்ற நிலையில் தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.

மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த அக்கிரெட்டி கூடம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

மேலும், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ளவர்களுள் 11 பேர் நிலைமை ஆபத்தாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோரி விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவேண்டும் என பிராத்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe