"நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் துவக்கி வைப்பு

published 2 years ago

"நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் துவக்கி வைப்பு

கோவை: கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்திய நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பரு என்னும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் அக்டோபர் 2ம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடிநீர் சுத்தம், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், குடிநீர் சுகாதாரம் மற்றும் வீடுகளில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் மேற்கொள்ளுதல், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை மற்றும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்தல், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இதுதொடர்பாக சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர். மேலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் குறித்தும் பிளாஸ்டிக் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், தூய்மைப்பணியாளர்கள், மாணவ - மாணவியர்களுக்கு மஞ்சைப்பைகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) கமலக்கண்ணன், கீரணத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் ராசு (எ) பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe