வாலங்குளமா...? காளான் குளமா..? : கன்ப்யூஸில் திமுக கவுன்சிலர்.. : வைரல் பதிவு கோவை :

published 2 years ago

வாலங்குளமா...? காளான் குளமா..?  : கன்ப்யூஸில் திமுக கவுன்சிலர்.. : வைரல் பதிவு  கோவை :

 வாலங்குளத்திற்கு பதிலாக காளான் குளம் என்று திமுக கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு பதிவிட்டது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. பெடல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் சைக்கிளிங் படகுகள் என மொத்தம் 20 படகுகள் இயக்கப்படுகின்றன.

இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாலாங்குளத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று வாலாங்குளம் கரைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மண்டல தலைவரும், திமுக கவுன்சிலருமான மீனா லோகு கலந்து கொண்டார்.

மேலும், அவர் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றையும் பாடினார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் வலாங்குளம் என்பதற்கு பதிலாக காளான் குளம் என்று  பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மீனா லோகுவின் அந்த பதிவு சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

கோவை மக்கள் பலரும் இதனை அரசியல் அடிப்படையில் கேலிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கோவை மேயராக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட பட்டியலில் மீனா லோகுவின் பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe