தயிர் கத்தரிக்காய் கிரேவி: வித்தியாசமான ஒரு ரெசிபி இதோ

published 2 years ago

தயிர் கத்தரிக்காய் கிரேவி: வித்தியாசமான ஒரு ரெசிபி இதோ

 

நம்முடைய ஊரில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் ஒன்று கத்தரிக்காய். இதில் சாம்பார், புளி குழம்பு, ஃப்ரய் போன்ற பல வகை உணவுகளை நாம் செய்வது வழக்கம். சற்று வித்தியாசமான ஒரு ரெசிபி இங்கே... 

தேவையான பொருட்கள்:

  • கத்திரிக்காய்- 4 
  • எண்ணெய்- இரண்டு தேக்கரண்டி
  • கடுகு- அரை தேக்கரண்டி 
  • கறிவேப்பிலை- ஒரு கொத்து 
  • வெங்காயம்- ஒன்று 
  • தக்காளி- இரண்டு 
  • இஞ்சி- ஒரு துண்டு 
  • பூண்டு- நான்கு 
  • தனியா- ஒரு தேக்கரண்டி 
  • மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி 
  • தயிர்- ஒரு கப் 
  • உப்பு- தேவையான அளவு 

செய்முறை:

  • முதலில் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு கத்திரிக்காயைச் சுருங்க வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளும்.
  • தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தொடர்ந்து அவற்றுடன் ஒரு கப் தயிர் சேர்த்துக் கிளறவும்.
  • இதன் பிறகு முன்னர் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறவும்.
  • பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • கொதிக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.

இந்த கிரேவி சாதத்துடனும் சப்பாத்தியுடன் உண்ண ஒரு புதிய சுவையிலான சைட் டிஷ்... 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe