பஜ்ரா மற்றும் முத்துத் திணை என்று அழைக்கப்படும் கம்பு ஒரு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தானியமாகும். கம்பு 'க்லூடென்' என்று சொல்லப்படும் பசையம் இல்லாதது என்பதால் பசைய-ஒவ்வாமை மற்றும் செலியாக் என்னும் சிறுகுடல் நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு உணவாகும். இவை கார்போஹைட்ரேட்டுகள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தியாமின், ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், நியாசின், பீட்டா கரோட்டின் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுகளாலும் நிரம்பியுள்ளது.
கம்பின் நன்மைகள்:
நீரிழிவு நோய்க்கு நல்லது- கம்பில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன என்பதால் இது மெதுவாக ஜீரணிக்கப்படுகின்றது என்பதாலும் நீண்ட காலத்திற்கு நிலையான குளுக்கோஸ் அளவை பராமரிக்கின்றது என்பதாலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக அமைகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்- உணவிலுள்ள நார்ச்சத்து மற்றும் கொழுப்பைக் குறைக்கும் இந்த தானியம் இதய நோயாளிகளுக்கு நல்லது.
செலியாக் நோய் மற்றும் பசையம் சகிப்புத்தன்மைக்கு ஏற்றது- செலியாக் நோய் மற்றும் பசையம் சகிப்புத்தன்மை கொண்ட நோயாளிகள் கம்பு அடிப்படையிலான உணவுகளைத் தேர்வு செய்யலாம்.
அடிக்கடி அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் புண்கள் உள்ளவர்களுக்கான சிகிச்சை- வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைக்கும் சில உணவுகளில் கம்பும் ஒன்றாகும். இதனால் அடிக்கடி ஏற்படும் அமிலத்தன்மை காரணமாகப் புண் உருவாவதையும் அசௌகரியத்தையும் கட்டுப்படுத்துகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கிறது- நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் கம்பின் நன்மை. கம்பை உட்கொள்வது மலச்சிக்கலைத் தூரத்தில் வைத்திருப்பதை உறுதி செய்யும். கம்பிலுள்ள கரையாத நார்ச்சத்து தான் இதற்குக் காரணம்.
சைவ உணவு உண்பவர்களுக்குப் புரதத்தை வழங்குகிறது- சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி மற்றும் மீன் பொருட்களிலிருந்து தேவையான புரதத்தைப் பெற முடியாது. இதற்கு மாற்றாகச் சைவ உணவு உண்பவர்களுக்கும் தேவையான புரதத்தை வழங்கும் திறனை உள்ளடக்கியது கம்பு. கம்பை ராஜ்மா, மூங்கில் பருப்பு, சென்னா பருப்பு போன்ற விதைகளுடன் இணைத்து உண்டால் ஒருவரின் புரதத் தேவை முழுமையடையும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத் தேவையான பொட்டாசியம் கம்பில் செழுமைக்காகக் காணப்படுகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஒருவரின் உடலிலிருந்து சோடியத்தை வெளியேற்ற உதவும் என்பதால் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
எலும்பை வலிமையாக்குகிறது- கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்கிறது- கம்பில் போதுமான அளவு நல்ல கொழுப்பு உள்ளது என்பதால் இது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்குத் தேவையான தரமான உணவாகும்.
சத்தான குழந்தை உணவு- கம்பு எளிதில் ஜீரணிக்கப்படுகின்றது மற்றும் சிறிய குழந்தைகளில் எவ்வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாத ஒரு உணவாகும். இதனால் அவை பாலூட்டும் காலத்திலும் பிற்காலத்திலும் குழந்தை உணவு தயாரிப்புகளுக்குக் கட்டாயப் பொருளாகின்றது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை- உடலில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்கிறது மற்றும் வயது கூடுவதினால் ஏற்படும் தோற்ற மாறுதல்களைத் தடுக்கிறது. மேலும் வயது முதிர்ச்சியால் ஏற்படும் அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், இருதய நோய்கள் மற்றும் காயங்களையும் குணப்படுத்த உதவுகிறது.
எடை மேலாண்மை மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்கு ஏற்றது.
பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது- இது வயிற்றின் pH அளவை சீராக்குகிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தின் உள்ளடக்கம் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாகும்.