கம்பு பக்கோடா எப்படி செய்யனும் தெரியுமா? விவரம் இதோ..!

published 2 years ago

கம்பு பக்கோடா எப்படி செய்யனும் தெரியுமா? விவரம் இதோ..!

 

தினமும் பள்ளி கல்லூரி முடித்து வரும் குழந்தைகளுக்கு என்ன சிநாக்ஸ் செய்றதுனு யோசிச்சு டையர்ட் அகிட்டீங்களா… உங்களுக்கான ஒரு எளிய சிநாக்ஸ் இதோ…

தேவையான பொருட்கள்:

  • கம்பு மாவு- 3/4 கப் 
  • கடலை மாவு- 1/4 கப் 
  • அரிசி மாவு- 2 மேஜைக்கரண்டி 
  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி 
  • மிளகாய்த் தூள்- தேவையான அளவு 
  • சீரகப்பொடி- 1/2 தேக்கரண்டி 
  • உப்பு- தேவையான அளவு 
  • சூடான எண்ணெய்- 3 தேக்கரண்டி 
  • எண்ணெய் பொறிப்பதற்கு- 1 கப் 
  • வெங்காயம்- நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கியது 2 
  • முட்டைகோஸ்- மெல்லியதாக நறுக்கியது 1/2 கப் 
  • பச்சை மிளகாய்- பொடியாக நறுக்கியது 2 அல்லது 3 
  • கறிவேப்பிலை- பொடியாக நறுக்கிய சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை- நறுக்கியது சிறிதளவு

செய்முறை:

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்துப் பொரிப்பதற்கான எண்ணெய்யை மிதமாகச் சூடாக்கவும்.
  • அதிலிருந்து மூன்று தேக்கரண்டி சூடான எண்ணெய்யை மாவில் ஊற்றிப் பிசறி விடவும். 
  • இப்போது வெட்டி வைத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்துப் பிசையவும். 
  • பின்பு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். 
  • எண்ணை நன்கு காய்ந்தவுடன் பக்கோடா மாவைக் கிள்ளிப்போட்டுப் பொறிக்கவும்.
  • பின் கரண்டியால் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பொறுக்கவும். 
  • ஒரு தட்டில் எண்ணெய் உறிஞ்சும் தாளைப் பரப்பி வைத்துப் பொரித்ததை எடுத்து வைக்கவும். 

சுவையான ஆரோக்கியமான மொறுமொறு கம்பு பக்கோடா தயார்...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe