கோவை மாநகாட்சி பள்ளி மாணவிகளுக்கு திடீர் மயக்கம்.. பெற்றோர் அதிர்ச்சி

published 2 years ago

கோவை மாநகாட்சி பள்ளி மாணவிகளுக்கு திடீர் மயக்கம்.. பெற்றோர் அதிர்ச்சி

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 743 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று  அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதே வகுப்பில் இருந்த சில மாணவிகளுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து 9 மாணவிகளையும் தனிமைப்படுத்திய ஆசிரியர்கள், உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் பள்ளிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதே வேளையில் மாணவிகளின் பெற்றோர்களும் அங்கு வரவே உடல்நல குறைவு ஏற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மாணவிகள் அனைவரும் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் பிரதாப், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பள்ளியில் உணவு, குடிநீர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் அங்கு மாநகராட்சி வாகனம் மூலம் கொசு மருந்தும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.



இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் பிரதாப் கூறியதாவது:

உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகள் அனைவரும் வீட்டிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் எடுத்து வந்து பருகியவர்கள். பள்ளி வளாகத்தில் சத்துணவோ, தண்ணீரோ உட்கொள்ளவில்லை. இரண்டு மாணவிகள் மட்டுமே வாந்தி மயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டனர். மற்ற மாணவிகள் இருமல், லேசான காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர்.

எதனால் மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது என்பது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றின் சார்பில் மூன்று குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 12 பேர் அடங்கிய மூன்று சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து மாணவிகளுக்கும் உடல்நல பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe