கோவை மாவட்டத்தில் 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

published 2 years ago

கோவை மாவட்டத்தில் 38-வது கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

 

கோவை: கோவை மாவட்டத்தில் 38-வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கோவை மாவட்டத்தில் 1530 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 340 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 109 முகாம்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 97 சதவீதம் பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று 15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 91 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 77 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

2-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 67 சதவீதம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 29 சதவீதம் பேருக்கும், 18-59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 10 சதவீத பேருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவலை அறிய இந்த இடுகயை க்ளிக் செய்யவும்: https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/09/2022092394.pdf

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe