இரண்டாவது முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகாளில் தோல்வியுற்ற மும்பை அணி.

published 2 years ago

இரண்டாவது முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகாளில் தோல்வியுற்ற மும்பை அணி.

கோவை: இந்தியன் பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு இந்த வருடம் 15வது ஐபில் தொடர்  26.03.2022 துவங்கியது. 

இப்போட்டிகள் வரும் 29.05 2022ல் முடிவடைகிறது.எட்டு அணிகள் பங்கேற்று வந்த லீக் போட்டியில் இந்த வருடம் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்க்கப்பட்ட நிலையில் பத்து அணிகளாக உயர்ந்துள்ளது.

2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2009ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி,2016ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2010,2011,2018,2021 என நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்று உள்ளது.

2012,2014ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

2013,2015,2017,2019 மற்றும் 2020 என ஐந்து முறை மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது.இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் விளையாடிய மும்பை அணி அனைத்திலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதற்கு முன் 2014ம் ஆண்டும் இதே போல் பங்கேற்ற முதல் ஐந்து போட்டியில் மும்பை தோல்வியடைந்த நிலையில் இரு முறை தொடர்ந்து தோல்வியைத் தழுவிய அணியாக மும்பை உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் இருபது ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக சிக்கர் தவான் 50 பந்துகளில் 70 ரன்னும்,மயன்க் அகர்வால் 32 பந்துகளில் 50 ரன்னும் சென்னை வீரர் ஷாருக்கான் 6 பந்துகளில் 15 ரன் எடுத்தனர். 

வெற்றி பெற199 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் டிவால்ட் பிரூவிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 49 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகி வெறியேறிய நிலையில் உனத்கட் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 பந்துகளில் 12 ரன்கள் அடுத்து அவுட் ஆகினார்.கடைசி ஓவரை ஓடியன் ஸ்மித் வீச ஒன்பது விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 186 ரன்கள் எடுத்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது. 

2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் முதல் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த அணியாக மும்பை உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe