கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க விளக்க உரை கூட்டம்- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

published 4 days ago

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க விளக்க உரை கூட்டம்- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அறிவொளி அரங்கத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை மண்டல விளக்க உரை கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அடிப்படை பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைக்காமல் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

 12,526 ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களை அனைவரையும் காலம் வரை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும், தோட்டக்கலைத் துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியமர்த்தப்பட்ட பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தால் அவர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் மேலும் கல்வி தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe