விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம்- கோவை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு..

published 1 day ago

விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் தாமதம்- கோவை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு..

கோவை : கோவை மாவட்டம் எட்டிமடை தாலுகா திருமலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பொன்மலை குமார்.

கடந்த 1992 ஆம் வருடம் அந்தப் பகுதியில் ஆதிதிராவிடர் நலத் துறை ஆதி திராவிடர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் விவசாயி பொன்மலைக்குமாரின் விவசாய நிலங்கள் சுமார் 4 ஏக்கர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது. 
 

இதற்காக இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதாது எனக் கூறி விவசாயி பொன்மலைக்குமார் கோவை செசன்ஸ் கோர்ட்டில் 1996 ஆம் வருடம்வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து கூடுதல் தொகையை வட்டியுடன் சேர்த்து பொன்மலைகுமாருக்கு ஆதி திராவிட நலத் துறை வழங்க உத்தரவிடப்பட்டது. 

ஆனால் குறிப்பிட்ட கால அவகாசம் முடிந்தும் பொன்மலைகுமாருக்கு 3 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று ஆதி தராவிட நலத்துறை அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்காக இன்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடம் பகுதியில் 2வது தளத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு கோர்ட்டு உத்தரவுபடி ஊழியர்கள் கோர்ட்டு உத்தரவு நகலுடன் வந்தனர். அப்போது அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். தாசில்தார் இல்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe