கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு கூட்டமின்றி இயக்கப்பட்ட சிறப்பு ரயில்- காரணம் என்ன?

published 1 week ago

கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு கூட்டமின்றி இயக்கப்பட்ட சிறப்பு ரயில்- காரணம் என்ன?

கோவை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.  தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மெமு எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயில் கோவையிலிருந்து 9:35 மணியளவில் புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி வழியாக 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது.

அங்கிருந்து மருமார்க்கமாக 2:00 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடைகிறது. இன்று முதல் 6ம் தேதி வரை இந்த ரயிலானது இயக்கப்பட உள்ளதாகவும் இடையில் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் இயக்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலானது ரிசர்வேஷன் இல்லாமல் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து பலருக்கும் தெரியாததால் முதல் நாள் கூட்டமின்றி காணபட்டது. கூட்டம் இல்லாததால் முதல் பயணம் செய்த பயணிகள் சவுகரியமாக பயணம் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe