சாண்ட்விச் இட்லி: அட, இப்படி கூட செய்யலாமா இட்லிய...

published 2 years ago

சாண்ட்விச் இட்லி: அட, இப்படி கூட செய்யலாமா இட்லிய...

 

போரிங்கான இட்லிய இன்டரெஸ்டிங்கா மாத்த ஒரு சூப்பர் ரெசிபி இதோ…!!!

தேவையான பொருட்கள்:

  • இட்லி மாவு- 2 கப்
  • கேரட்- 1
  • பீன்ஸ்- 10
  • உருளைக்கிழங்கு- 1
  • வெங்காயம்- 2
  • தக்காளி-2
  • இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி- சிறிது
  • கறிவேப்பிலை- சிறிது
  • உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு- 1/2 தேக்கரண்டி
  • சோம்பு- 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

  • முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியைச் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சோம்பு போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
  • அதோடு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி, நறுக்கிய காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கடைசியாகக் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.
  • இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துத் தண்ணீர் ஊற்றவும்.
  • பிறகு இட்லித் தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 தேக்கரண்டி மசாலாவை வைத்து, மேலும் அதன் மேல் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடி வேக வைக்கவும்.
  • இட்லி நன்கு வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி நல்ல காம்பிநேஸன் என்றாலும் இதற்கு சைட் டிஷ் எதுவும் இல்லாமலும் சாப்பிடலாம்…

இட்லி தட்டில் மாவை ஊற்றி மசாலாவை வைக்காமல், ஏற்கனவே செய்த இட்லியின் நடுவிலும் இந்த மசாலாவை வைத்து தோசைக் கல்லில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கலாம்… மொரு மொருப்பான சாண்ட்விச்சை விரும்புவோர் இவ்வாறு செய்யலாம்…
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe