15 சிறப்பான திட்டங்களை முன்னெடுத்துள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள்

published 2 years ago

15 சிறப்பான திட்டங்களை முன்னெடுத்துள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள்

கோவை: கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மாணவிகள் ரோட்டரி அறக்கட்டளையுடன் இணைந்து 15 சிறப்பான திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் ரோட்ராக்ட் கிளப் உடன் கைகோர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் 15 விதமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

அதன்படி, விதைப்பந்துகள் தானம், திருநங்கைகளுக்கு உதவும் முயற்சி, தற்கொலைத் தடுப்பு நடவடிக்கை, உணவு தானம், தொழில்முனைவோராய்  பெண்கள் உருவெடுக்க ஊக்கமளித்தல், சைகை மொழிகளை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மேலும், புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் முடி தானம் செய்யும் இயக்கத்தையும் துவங்கியுள்ளனர். இது

சமுதாயத்திற்கு சேவை செய்யவும், மக்களை கொண்டாடும் நோக்கத்திலும் இந்த 15 திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், கல்லூரியில் ரோட்ரேக்ட் கிளப் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe