கோவையில் 137 போலீசாருக்கு 'ப்ரமோஷன்' " உற்சாகமாய் அதிகாரிகளிடம் வாழ்த்து பெற்ற காவலர்கள்

published 2 years ago

கோவையில் 137 போலீசாருக்கு 'ப்ரமோஷன்' " உற்சாகமாய் அதிகாரிகளிடம் வாழ்த்து பெற்ற காவலர்கள்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை மாநகரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பணியாற்றி வரும் 137 காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கபட்டது, அவர்கள் புதன் கிழமை ஆணையர் பிரதீப் குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும், மேலாக  காவல் துறையில் பணியாற்றிய காவலர்களுக்கு, சிறப்பு உதவி ஆய்வாளர் என்ற, பதவி தமிழக அரசால்  வழங்கப்படுகிறது. கோவை மாநகர காவல்நிலையங்களில், பணியாற்றிய 137 காவலர்கள் இந்த பதவி உயர்வை பெற தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, பதவி உயர்வு பெற்ற காவலர்கள் அனைவரும் புதன் கிழமை கோவை கோபாலபுரம் பகுதியில், உள்ள  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் பிரதீப் குமாரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டனர்.

இந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வகையில் அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து காவலர்கள் மத்தியில் பேசிய ஆணையர், "இதுவரையிலும் நீங்கள் காவல் நிலையத்தில், உள்ள, உங்களது உயர் அதிகாரிகளின் கட்டளையின் கீழ் பணியாற்றி வந்தீர்கள். தற்பொழுது உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள பதவியின் மூலமாக காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, நீங்கள் கட்டளையிடும் இடத்திற்கு வந்துள்ளீர்கள். எனவே நீங்கள் கட்டளையிடும் பட்சத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலும், காவல்துறைக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் எடுக்கும் முடிவுகளை நன்கு ஆராய்ந்து பின் செயல்படுத்த வேண்டும்." என்றார். பின்னர் அனைத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் குழு அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe