எனக்கு 'ஓசி' டிக்கெட் வேண்டாம்.. கோவையில் நடத்துனரிடம் மல்லுக்கட்டிய வைராக்கிய மூதாட்டி - வைரல் வீடியோ 1

published 2 years ago

எனக்கு 'ஓசி' டிக்கெட் வேண்டாம்.. கோவையில் நடத்துனரிடம் மல்லுக்கட்டிய வைராக்கிய மூதாட்டி - வைரல் வீடியோ 1

கோவை: அரசு சாதாரண பஸ்களில் பயணிக்கும்  பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக  பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு அதற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஓசியில் நாம் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என்று பெண்களை பார்த்து பேசினார்.

இந்த நிலையில் கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துனர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட நேரம் நடத்துனரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பஸ்ஸில் பயணம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கோவையில் வைரலாகி வருகிறது.

Video https://youtu.be/B4hOr3nZD8c

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe