ஆயுத பூஜை விடுமுறையையொட்டி கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

published 2 years ago

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

 

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும்  அடுத்த மாதம் 20-ஆம் தேதி இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்குச் சென்னையைச் சென்றடையும்.

இந்த ரயில், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு,  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல்  - எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (06045), சென்னையிலிருந்து நாளை (30-ஆம் தேதி) மற்றும் 21-ஆம் தேதி பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் கோவைக்கு 30 மற்றும் 21-ஆம் தேதி இரவு 1.17 மணிக்கு வந்து 1.20-க்கு புறப்பட்டுச் செல்லும். சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் இரவு 10.12-க்கு வந்து 22.15-க்கு புறப்பட்டுச் செல்லும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe