பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவுக்கு கோவை வழக்கறிஞர்கள் நோட்டீஸ்.!

published 2 years ago

பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவுக்கு கோவை வழக்கறிஞர்கள்   நோட்டீஸ்.!

கோவை: பொன்னியின் செல்வன் என்ற பெயரை எந்தவகை சுருக்கு தலைப்பு இன்றி அப்படியே முழுமையாக  பயன்படுத்த வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உரிமை கோரிக்கை நோட்டீசை படக்குழுவினருக்கு அனுப்பி உள்ளனர்

கல்கியால் பொன்னியின் செல்வன் என்ற  நாவலை திரைப்படமாக தயாரிக்கிறது லைகா தயாரிப்பு நிறுவனம். இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பை PS-1 என்று சுருக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்து மன்னர்களையும் வீரர்களையும் குறிப்பிடக்கூடிய காவியமாக பார்க்கப்படுவதால் அப்பெயரை அப்படியே பொன்னியின் செல்வன் என  பயன்படுத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இது குறித்து உரிமை கோரிக்கை நோட்டீசை லைகா தயாரிப்பு நிறுவனர் சுபாஸ்கரன், இயக்குநர்  மணிரத்னம் , நடிகர் விக்ரம் , ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர்.

படக்குழுவினர் அதனை ஏற்று பொன்னியின் செல்வன் என்றே பெயரையே பயன்படுத்த வேண்டும் எனவும்,  படக்குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கோவையைச் சேர்ந்த  வழக்கறிஞர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe