ஜூலன் நிஷித் கோஸ்வாமி- இவர் யார் தெரியுமா...?!

published 2 years ago

ஜூலன் நிஷித் கோஸ்வாமி- இவர் யார் தெரியுமா...?!

 

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்காக பிசிசிஐ 'ஹால் ஆஃப் ஃபேம்' ஒன்றை நிறுவினால், அதில் ஜூலன் கோஸ்வாமி நிச்சயமாக இடம்பெறுவார். நவம்பர் 25, 1982-ல் பிறந்த இவர் ஒரு லெஃப்ட்-ஹாண்டெட் பந்து வீச்சாளர். இவர் 204 ODI ஆட்டங்களில் பங்கேற்று, 255 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெண்கள் ODI கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைப் படைத்துள்ளார். ஜூலன் கோஸ்வாமி 2011-ல் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரருக்கான M.A. சிதம்பரம் கோப்பையையும் 2007-ல் ICC மகளிர் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார். ஜனவரி 2016-ல், ICC மகளிர் ODI பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

கிரிக்கெட் விளையாட்டில் பெண்கள் அணியும் உள்ளது என்பதே பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும் நிலையிலும் உலகம் முழுவதையும் தன்னுடைய விளையாட்டுத் திறனால் அசத்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி. 2006-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இவர் தேசிய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து இவரின் வெற்றிப் பயணம் துவங்கியது. அங்கு, அரைசதம் அடித்து இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு  உதவினார். லீசெஸ்டரில் மற்றும் டான்டனில் நடந்த போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடரின் வீராங்கனை ஆனார்.

அதே ஆண்டு மும்பையில் நடந்த காஸ்ட்ரோல் விருதுகளில் சிறப்பு விருதைப் பெற்றார். 2007-ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் வீராங்கனை என்ற விருதையும் வென்றார். தொடர் வெற்றிகளின் மூலம் விரைவில், அவர் தேசிய அணியின் கேப்டனாக அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் 2010-ல், அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்மஸ்ரீ விருதையும் வென்றார்.

பந்துவீச்சு திறன் ஒருபுறம் இருக்க, கோஸ்வாமி பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினார். 2002-ஆம் ஆண்டு டவுண்டனில் இங்கிலாந்துக்கு எதிராக 214 ரன்களை எடுத்து சாதனை படைத்த இந்திய மகளிர் அணியின் ஸ்டார் ஜோடியாகத் திகழ்ந்த மிதாலி ராஜ்-ஜூலன் கோஸ்வாமி ஜோடி 157 ரன்களைச் சேர்த்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. இதில் கோஸ்வாமி 62 ரன்களை எடுத்தார். 2014-ஆம் ஆண்டில் கோஸ்வாமி இந்தியா- இங்கிலாந்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை அமைத்துக்கொடுத்தார். 2015-ஆம் ஆண்டில், பிசிசிஐ முதல் முறையாக கிரிக்கெட் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தங்களை வழங்கிய பொழுது, அந்த ஒப்பந்தத்தைப் பெற்ற நான்கு மூத்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

புகழ்பெற்ற மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி, 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் 25-ஆம் தேதி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஜூலன் தனது கடைசி சர்வதேசப் போட்டியை அதற்கு முந்தைய தினமான 24-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி, அந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தந்து, அந்த போட்டியின் இறுதியில் தனது ஓய்வை அறிவித்து தனது வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe