கோவையில் சர்ச்சில் திருட்டில் ஈடுபட்ட நபர்! சி.சி.டி.வி காட்சி உள்ளே...

published 1 day ago

கோவையில் சர்ச்சில் திருட்டில் ஈடுபட்ட நபர்! சி.சி.டி.வி காட்சி உள்ளே...

கோவை: கோவை, இராமநாதபுரம் ட்ரினிட்டி தேவாலயத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளை ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர் காவல் துறையினர்.

இதை அடுத்து தேவாலயத்தின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரனையை  தீவிரப்படுத்திய நிலையில் சரவணம்பட்டியை சேர்ந்த ஈனமுத்து என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் ஈனமுத்து உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DCdXWWPvD8g/?igsh=b2x1ZjUxMXRqN21u

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe