கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு- கைதான நபர்களின் உறவினர்கள் போராட்டம்- காரணம் என்ன?

published 22 hours ago

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு- கைதான நபர்களின் உறவினர்கள் போராட்டம்- காரணம் என்ன?

கோவை: கோவையில் கடந்த 2022 ஆண்டு டவுன்ஹால் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் உயிரிழந்த ஜமேசா முபின் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை NIA விசாரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள முகமது ரியாஸ், அப்சர் கான் ஆகிய இருவரை கடந்த மூன்று மாதங்களாக சந்திக்க முயன்று மனு போட்ட நிலையில் சந்திக்க விடாமல் சிறை நிர்வாகத்தினர் நடந்து கொள்வதாகவும் சிறையில் அவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை எனவும் அவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அவர்களது உறவினர்கள் மத்திய சிறைச்சாலை நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறையில் உள்ளவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


(இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் கேட்ட பொழுது வழக்கமாக கைதிகளின் தங்கும் அறை, அவர்களின் உடமைகளை பரிசோதனை செய்வது வழக்கம் எனவும் அவ்வாறு செய்யும் போது முகம்மது ரியாஸ், மற்றும் அப்சர் கான் சிறை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் இதனால் மூன்று மாதம் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சில சலுகை நிறுத்தி வைத்ததாகவும் இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தொடர்ந்து உறவினர்களில் ஒருவரை மட்டும் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்).

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe