தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்பதாம் வகுப்பு பயிலும் தனது மகளுக்கு அச்சுறுத்தல்- கந்து வட்டி கும்பல் மீது தாயார் புகார்...

published 6 days ago

தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்பதாம் வகுப்பு பயிலும் தனது மகளுக்கு அச்சுறுத்தல்- கந்து வட்டி கும்பல் மீது தாயார் புகார்...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை பி .என். புதூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி கஸ்தூரி தனது 14 வயது மகளான ரஷனாவுடன் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, தனது கணவர்  கண்ணன் வெல்டிங் ராடு விற்பனை செய்யும் டீலராக இருந்து வந்ததாகவும் தொழில் நிமித்தமாக கடன் வாங்கியதாகவும் அதை பாதியை செலுத்திய நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக வீட்டில் சண்டையிட்டு கடந்த இரண்டு மாத காலமாக தலைமுறைவானதாக கூறினார்.

இதனிடையே அவர் கடன் வாங்கிய கந்துவட்டி ஆட்கள் கடனைக் கேட்டு தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுவதாகவும் கடந்த வாரம் வீட்டிற்கு வந்து மிரட்டிய அவர்கள் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் தனது மகளை மிரட்டி பள்ளிக்கு செல்லும் போது கடத்தி சென்று விடுவோம் என்று கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார்.

தனது கணவர் பலரிடம் கடனால் ஏற்பட்ட பிரச்சனையில் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் வீட்டில் சண்டை ஏற்பட்டு அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் வீட்டை விட்டு சென்றதாகவும் தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தெரியவில்லை எனவும் குறிபிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe