தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : 500 பேர் கைது

published 2 years ago

தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : 500 பேர் கைது

கோவை: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சம்பள உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.721 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்  எனவும், காப்பீடு பி.எப் இ.எஸ்.ஜ முறைப்படுத்த வேண்டும் எனவும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் கால வரையற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களை விடுவித்தனர்.

இதே போல  சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe