சக்திவாய்ந்த மூலிகை டீ... என்னென்ன பயன்கள் தருகின்றது...?!

published 2 years ago

சக்திவாய்ந்த மூலிகை டீ... என்னென்ன பயன்கள் தருகின்றது...?!

 

 "ஸ்வீட் வுட்" என்று அழைக்கப்படும் அதிமதுரம், அது தான்னுங்க இந்த சக்திவாய்ந்த மூலிகை டீ-யோட மெய்ன் இங்கிரிடியண்ட்...   

அதிமதுரம் ஒரு பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த மருத்துவ மூலிகையாகும். லைகோரைஸ் வேர் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இது  நறுமணமானது மற்றும் தேநீர் போன்ற பானங்களில் சுவையூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் இயற்கையில் குளிர்ச்சியான, ஜீரணிக்க கனமான மற்றும் சுவையில் இனிப்பான பொருள். எல்லா குணங்களையும் பெற்ற இந்த பொருள் மருத்துவ குணங்களையும் ஒரு ஆல்-ரவுண்டர் தான்...

 

அதிமதுரத்தின் பயன்கள்:

இருமல், சளி மற்றும் தொண்டைப் புண்ணிலிருந்து நிவாரணம் பெற உதவும். 

கண் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். 

உடல் வலிமையை மேம்படுத்த உதவுகிறது. 

விந்து மற்றும் விந்து தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

வாய்ப் புண்கள் மற்றும் பல் தகடுகள் போன்ற வாய்வழி பிரச்சனைகளைச் சரி செய்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். 

பித்தம் மற்றும் வாதத்தைச் சமன் செய்து பித்த கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. 

வயிற்றுப் புண்கள் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற இரைப்பை பிரச்சனைகளைச் சரி செய்கிறது.

சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிக்க வல்லது.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கிறது.

உடல் ஆற்றலை மேம்படுத்தவும் சோர்வை நிர்வகிக்கவும் உதவுகிறது.

சருமத்தின் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

 

உட்கொள்ளும் முறைகள்:

அதிமதுரத் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதிலுள்ள இனிப்புத் தன்மையைச் சிலர் விரும்ப மாட்டார்கள்.

அதிமதுரப் பொடியைத் தேன் கலந்து உட்கொள்ளலாம்.

அதிமதுரப் பொடியைத் தேன் கலந்து புண்களின் மீது தடவலாம்.

கஷாயம் செய்யும் போது சேர்த்துக் கொள்ளலாம்.

அதிமதுரத்தை தேநீர் செய்து பருகலாம். 

 

இவ்ளோ மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த அதிமதுரத் தேநீரை எப்படிச் செய்வது என அறிய நமது ரெஸிபிஸ் பக்கத்திலுள்ள செய்முறையை இங்கே படியுங்கள்: https://newsclouds.in/news/1281/Licorice_tea_filled_with_medicinal_properties

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe