தீபாவளியையொட்டி கோவையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

published 2 years ago

தீபாவளியையொட்டி கோவையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

 

கோவை: தீபாவளி பண்டிகைக் கால விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கோவை வழியாகச் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்டம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தீபாவளி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையையொட்டி முன்னிட்டு பயணிகள் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை-உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் இடையிலான சிறப்பு ரெயில் (எண்: 05304), வரும் 11-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் காலை 4.40 மணிக்குக் கோவையிலிருந்து புறப்பட்டு, 3-வது நாள் காலை 8.35 மணிக்கு கோரக்பூரைச் சென்றடையும்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்  - கோவை இடையிலான சிறப்பு ரெயில் (எண்: 05303), கோரக்பூரில்  இருந்து வரும் 8-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோரக்பூரிலிருந்து   8.30 மணிக்குப் புறப்பட்டு 3-வது நாள் காலை 7.25 மணிக்குக் கோவையை வந்தடைகிறது.

இந்த ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரெயிலில் இரண்டாம் வகுப்பு ஏ.சி.  பெட்டி-1, மூன்றாம் வகுப்பு ஏ.சி.-2, படுக்கை வசதி பெட்டி-10, சாதாரண பெட்டி-7 இணைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe