ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு.. 6000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்

published 2 years ago

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு.. 6000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 6000 + காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-10-2022 முதல் 14-11-2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த ஊரில் எத்தனை பணியிடங்கள் :

கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்

மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்

தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்

வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
நீலகிரி – 76 பணியிடங்கள்
சென்னை – 344 பணியிடங்கள்

தருமபுரி – 98 பணியிடங்கள்
நாகப்பட்டினம் – 98 பணியிடங்கள்
திருவள்ளூர் – 237 பணியிடங்கள்
தூத்துக்குடி – 141 பணியிடங்கள்
கடலூர் – 245 பணியிடங்கள்
திண்டுக்கல் – 312 பணியிடங்கள்
காஞ்சிபுரம் – 274 பணியிடங்கள்

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:

மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 14.11.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க : https://www.drbcbe.in/
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe