இந்த ஆண்டு தீபாவளி-க்கு புதுசா என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்குனு தெரியுமா...?!

published 2 years ago

இந்த ஆண்டு தீபாவளி-க்கு புதுசா என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்குனு தெரியுமா...?!

தீபாவளியின் போது திரைப்படங்களை வெளியிடுவது எப்போதுமே வழக்கம் தான்.  அதே போல் இந்த ஆண்டும் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான வெளியீடுகள் உள்ளன.

சர்தார்
கார்த்தி, ராஷி கண்ணா, லைலா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சர்தார், இரும்புத்திரை புகழ் பி. எஸ். மித்ரன் இயக்கிய தமிழ் அதிரடி உளவுத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி சர்மா, சங்கி பாண்டே மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அதே நேரத்தில், லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சர்தார் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.



ஒரி தேவுடா
2020-ஆம் ஆண்டில், 'ஓ மை கடவுளே' மூலம் அஸ்வத் மாரிமுத்து ஒரு கிளாசிக் ரோம்-காம் படத்தை வழங்கி பிரபலமானார். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த இந்த படம் திரையரங்குகளில் மிகச் சிறப்பாக வசூல் செய்தது. இப்போது, ​​விஸ்வக் சென் மற்றும் மிதிலா பால்கர் நடித்த இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை அஷ்வத் வெளியிட்டுள்ளார். விஸ்வக் சென் அசோக் செல்வன் வேடத்திலும், மிதிலா பால்கர் ரித்திகா சிங்காகவும் நடித்துள்ளார். ஆஷா பட் வாணி போஜனின் வேடத்திலும் பவன் கல்யாண் விஜய் சேதுபதியின் இடத்திலும் நடித்துள்ளனர். தமிழில் ஒரிஜினல் சிறப்பாக வந்ததால் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.

மான்ஸ்டர்
மான்ஸ்டர் என்ற மலையாள க்ரைம்-ஆக்ஷன் திரில்லரில் மோகன் லால் மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வைசாக் இயக்கி, உதய்கிருஷ்ணா எழுதியுள்ளார். ஆஷிர்வாத் சினிமாஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால் பஞ்சாபி லக்கி சிங்காக நடித்துள்ளார். தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் அவர் படத்திற்காக கலரிப்பயட்டு செய்ததாகத் தெரிகிறது. ஒளிப்பதிவாளராக சதீஷ் குருப், கலை இயக்குநராக ஷாஜி நடுவில், படத்தொகுப்பாளராக ஷமீர் முகமது இத்திரைபடத்தில் பணியாற்றியுள்ளனர். இந்தப் படமும் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

பிரின்ஸ்
அனுதீப் கேவி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் புதுமுக நடிகை மரியா ரியாபோஷப்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிரின்ஸ், ஒரு தமிழ் காதல் படம். படத்தின் கதைக்களத்தில் ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் இளம் பிரிட்டிஷ் பெண்ணை ஹீரோவான இன்னொரு ஆசிரியர் காதலிக்கிறார். ஹீரோ ஹீரோயினைக் கவர்ந்திழுக்க முயற்சித்து, பின் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய போரான  திருமணம் செய்து கொள்ளம் போரை இருவரும் எதிர்கொள்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, மனோஜ் பிரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே. எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் பிரேம்கி அமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அம்மு
குடும்ப வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் இந்நாட்களில் மிகவும் பரவலாகிவிட்டன. இதே கதை களத்தில் தான் அமைந்துள்ளது  தெலுங்கு படம் அம்மு. சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருக்கும் படம் அம்மு. இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிராமா-த்ரில்லர் என்று கூறப்படும் இப்படம் ஸ்டோன் பெஞ்ச் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் அபூர்வா ஷாலிகிராம், வசனகர்தா பத்மாவதி மல்லாடி, எடிட்டர் ராதா ஸ்ரீதர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி ஜேவியர் ஆகியோர் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.

படவெட்டு
நிவின் பாலி மற்றும் அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படவெட்டு, மலையாள ஆக்‌ஷன்-த்ரில்லர். யூட்லீ பிளிம்ஸின் கீழ் அறிமுக இயக்குனர் லிஜு கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். சன்னி வெய்ன் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர் மற்றும் ஷம்மி திலகன் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் வட கேரளாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையைச் சித்தரிக்கிறது. தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷபீக் முகமது அலி படத்தைத் தொகுக்க, கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe