கோவையில் மழையால் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: பாதுகாப்பாக இருக்க டாக்டர்கள் அறிவுரை

published 2 years ago

கோவையில் மழையால் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: பாதுகாப்பாக இருக்க டாக்டர்கள் அறிவுரை

கோவை: கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவையில், ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள், பகலில் மனிதர்களை கடிப்பதன் வாயிலாக டெங்கு பரவுகிறது. முதலில் தலைவலி, சளி, உடல்வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இதை உணர்வோர், உடனடியாக டாக்டர்களை அணுகி, சிகிச்சை பெற வேண்டும்.

சில தினங்களாக, கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் தினமும், 10-லிருந்து, 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை, 'ஸ்கேன்' உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனையில், காய்ச்சல் பாதிப்புக்கு, 4 பேர் உள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சிறப்பு வார்டு அமைக்கப்பட உள்ளது. காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 'ஸ்கேன்' எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும். தேவையான மருந்து, பரிசோதனை கருவிகள் தயார் நிலையில் உள்ளன. வீடு, சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும்.

நன்கு கழுவிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள், காய்கறி சூப், சூடான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.'' என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe