சென்னையில் செய்த கொலைக்குக் கோவையில் சரண்

published 2 years ago

சென்னையில் செய்த கொலைக்குக் கோவையில் சரண்

கோவை: சென்னை இராயப்பேட்டையில் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (48) என்பவர் கடந்த 2ம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில்  தலைமறைவாக இருந்த மறுவாழ்வு மைய உரிமையாளரின் கணவர் கார்த்திகேயன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கின் முக்கிய நபராகத் தேடப்பட்டு வந்த மையத்தின் உரிமையாளரின் கணவரான கார்த்திகேயன் கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ராஜ், ஆட்டோ ஓட்டுனர். அவர் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். போதை பழக்கத்துக்கு அடிமையான அவர் இராயப்பேட்டையிலிருந்த தனியார் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் குடிக்கத் தொடங்கிய காரணத்தினால் அவரது குடும்பத்தினரால் மீண்டும் அங்கு சேர்க்கப்பட்டார். மறுவாழ்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அங்கு துன்புறுத்தப்பட்டார் என்றும், அந்த காயங்களின் காரணமாக சிகிச்சை பலனில்லாமல் இறந்தார் என்றும் அவரது மனைவி அளித்த புகாரில் குறுப்பிடப்பட்டுள்ளது.   
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe