என். ஐ. ஏ. அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளைத் தமிழகக் காவல்துறை செய்யும்: டிஜிபி சைலேந்திர பாபு

published 2 years ago

என். ஐ. ஏ. அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளைத் தமிழகக் காவல்துறை செய்யும்: டிஜிபி சைலேந்திர பாபு

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழக டி. ஜி. பி. சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த 19 பேருக்கு சைலேந்திர பாபு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி. ஜி. பி. சைலேந்திரபாபு கூறியதாவது: 
"கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கோவை மாநகர காவல்துறை துரிதமாகச் செயல்பட்டது. சம்பவ இடத்தை பாதுகாப்பாக வைத்து தடயங்களைச் சேகரித்தது. அதில் இறந்த நபர் யார் என்பதைக் கண்டுபிடித்தனர்.

ஆறு குற்றவாளிகளை மிகத் துரிதமாக ஆதாரங்களைத் திரட்டி கைது செய்துள்ளனர். 5 பேரைக் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இதில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் துரிதமாகத் துப்பு துலக்கி ஆதாரங்களைத் திரட்டி கைது செய்த காவல் துறையினருக்குப் பாராட்டு மற்றும் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. என். ஐ. ஏ. விசாரணைக்கு முதல்வர் நேற்று பரிந்துரை செய்தார். உள்துறை செயலகம் இன்று என். ஐ. ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

என். ஐ. ஏ. அதிகாரிகள் கோவைக்கு வந்துள்ளனர். என். ஐ. ஏ. அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. என். ஐ. ஏ. வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் காவல்துறை செய்யும். புலன் விசாரணை விபரங்களைச் சொல்ல முடியாது.

காவல் துறையினருக்குக் கிடைக்கும் ஆதாரங்களை என். ஐ. ஏ. விடம் ஒப்படைப்போம். இவ்வழக்கில் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தியது தொடர்பாகக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்துள்ளோம். என். ஐ. ஏ. விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் கைது செய்வார்கள்." எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe