தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவை மாணவிக்குத்  தங்கம்..!

published 2 years ago

தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவை மாணவிக்குத்  தங்கம்..!

கோவை: சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தடகளப்போட்டியில், கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி, இரண்டு பதக்கங்கள் வென்றார்.

அதலெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், '2-வது தேசிய 23 வயதுக்குப்பட்டோருக்கான தடகளப்போட்டி' சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்தது. 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியிட்டனர். 

100மீ., 200மீ., 400மீ ஓட்டம், நடையோட்டம், தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்றன. 

பீளமேடு பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பி. பி. ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒலிம்பா ஸ்டெபி போட்டியிட்டார்.

இதில், அவர் 400மீ., ஓட்டத்தில், 55.90 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல், 400மீ., தடையோட்டத்தில், 1.01.17 நிமிடங்களில் இலக்கை கடந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். 

ஒடிசாவைச் சேர்ந்த பிரக்யான் பிரசாந்த் சாகு 1.00.28 நிமிடங்களில் இலக்கை கடந்து முதலிடத்தைப் பிடித்தார். 

வெற்றி பெற்ற மாணவி ஒலிம்பா ஸ்டெபியை கல்லூரி உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe