கோவையில் அரசு அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

published 2 weeks ago

கோவையில் அரசு அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

கோவை: கோவையில் நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ சோதனைச்சாவடி என நேற்று ஒரே நாளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 5 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை காந்தி மாநகரில் நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு கட்டிட அனுமதி, மனை வரன்முறைப்படுத்தல் ஆகியவற்றுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். 

அனுமதி தர விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான போலீசார் திடீரென நகர ஊரமைப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது உள்ளே யாரையும் விடவில்லை. வெளியேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மேஜை டிராயர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் வாகனங்கள், பைகள், டிபன் பாக்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். 

இந்த சோதனையில் அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் யாரிடம் எதற்காக லஞ்சமாக வாங்கினார்கள்? யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றியும் விசாரணை தொடர்கிறது. அதன் பிறகு வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியிலும் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, அங்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

நேற்று ஒரே நாளில் கோவையில் மட்டும் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe