கோவையில் திறக்கப்பட்ட எல்காட்...

published 3 days ago

கோவையில் திறக்கப்பட்ட எல்காட்...

கோவை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுகிளும் திமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, புதிய தொழில் பூங்கா கட்டத்தின் அலுவலகங்களுக்கான குத்தகை ஆணைகளை தொழில்நுட்ப நிறுவனங்களிடம் முதல்வர் வழங்கினார்.

158.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய டைடல்  பார்க் செயல்பட தொடங்கியவுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும்,

சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவையின் தனி அடையாளமாக இந்த டைடல் பார்க் திகழும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடத்தில் இரண்டு அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 150 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 120 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உணவு அருந்தமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் இருந்து ஐந்தாம் தளம் வரை, தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா மொத்த 2, 94,362 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினையடுத்து, பீளமேடு
சுகுணா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்ததற்கான செயல்முறை ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe