கோவை தடாகம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் தென்பட்ட சிறுத்தை...

published 11 hours ago

கோவை தடாகம்  பகுதி மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் தென்பட்ட சிறுத்தை...

கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டு மாடுகள், காட்டுபன்றிகள், மான்கள் என பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது.

இந்நிலையில் இன்று தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாறையின் மீது சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். தற்பொழுது அவை வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ள மலையில் சிறுத்தை தென்பட்டுள்ளதால் ஊருக்குள் வருவதற்கு முன்பு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேசமயம் இந்த பகுதி Reserve Forest க்குள் இருப்பதால் சிறுத்தை இருப்பது இயல்பு எனவும் வனத்துறை தொடர்ந்து  சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை   ஆடு, கோழி உள்ளிட்டவைகளை  கொன்று சென்றது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe