கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தனியார்) கலையரங்கில் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், "பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்" என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024 நடைபெற்றது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியால் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகுருசாமி, முதல்முறையாக இந்த நிகழ்வை நடத்துவதாகவும் ஒவ்வொரு வருடமும் இதனை தொடர்ந்து நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் முக்கிய நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான எண்ணத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.
ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மக்கள் பல்வேறு படைப்புகளை கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அதிகமான தயாரிப்புகளை கொடுக்கும் பொழுது தான் நாடு வளர்ச்சி அடையும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும் அனைவரும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது என்பது மாணவர் பருவத்திலேயே வரவேண்டும் என தெரிவித்த அவர் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு படைப்புகளை படைப்பதற்கான செயல்களை செய்ய வேண்டும் எனவும் அப்பொழுதுதான் அவர்கள் வளர்ந்து வரும் பொழுது பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பார்கள் எனவும் நாட்டிற்கான சேவைகளை அவர்களால் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
இது போன்ற நிகழ்வுகளில் ஜெயிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல அதில் பங்கேற்க வேண்டும் என்பதே முக்கியம் அதுவே அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முதல் படியாக இருக்கும் என தெரிவித்தார்.
சமீப காலங்களில் ஆளுநர் பங்கேற்கும் கல்வி நிகழ்ச்சிகளில் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணிக்கும் நிகழ்வுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அது போன்ற நிகழ்வுகள் வருந்தத்தக்கது எனவும் இது போன்ற கல்வி நிகழ்வுகளில் இருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் இருவரும் பிறர்க்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
துர்கிஷ்டவசமாக தமிழ்நாட்டில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இது போன்ற நடைபெறவில்லை எனவும் அது அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான ஈகோ க்ளாஸ் தான் என தெரிவித்தார். இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருதி இருவரும் இணைந்து கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லும் பொழுது பெருமையாக இருப்பதாகவும் ஆனால் அதே சமயம் அதிக எண்ணிக்கை மட்டும் பத்தாது அதற்கான தரம் வேண்டும் என தெரிவித்தார். 100 பேரை மோசமானவர்களாக கொண்டு சேர்ப்பதை விட 10 பேரை நல்லவர்களாக கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் தரம் என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக இருப்பதாகவும் விமர்சித்தார். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அதை பாடியவர்கள் அல்லது ரெக்கார்டிங் மிஸ்டேக்காக இருக்கலாம் என தெரிவித்தார்.
நீட் தேர்வு என்பது கட்டாயம் வேண்டும் என தெரிவித்த அவர் இது குறித்து தற்போதைய முதலமைச்சர் இதற்கு முன்னால் இருந்த முதல் அமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறினார். நீட் தேர்வு என்பது மிக முக்கியமான தேர்வு என குறிப்பிட்ட அவர் எந்த படிப்பாக இருந்தாலும் அதற்கான ஒரு தரம் வேண்டும் என கூறினார். நான் கல்லூரி படிக்கும் பொழுதும் நுழைவு தேர்வு இருந்ததாகவும் அதனால் தரமான இன்ஜினியர்கள் உருவானதாகவும் தற்பொது தரமான இன்ஜினியர்கள் மோசமாக போய்விட்டார்கள் என தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வு என்பது மிக மிக முக்கியம் என தெரிவித்த அவர் அறிவு இருந்தாலும் மருத்துவ படிப்பிற்கு அவர் தகுதியானவர்களா என்பதை பார்த்தற்காம தான் நீட் நுழைவு தேர்வு வைக்கப்படுவதாக தெரிவித்தார். நீட் தேர்வு இருந்தால் தான் இவ்வளவுதான் கட்டணம் என்று நிர்ணயிக்கப்படும் இந்த மதிப்பெண் இருந்தால் தான் அவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்று இருக்கும் எனவும் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் காசை பயன்படுத்தி மருத்துவம் பயில்வார்கள் என தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் நோக்கமே தகுதியுள்ள அன்புள்ள இளைஞர்களை 21 ஆம் நூற்றாண்டு வேண்டிய இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனவும் அதற்கான சாராம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதாகவும் அதனை நடைமுறை படுத்தும் பொழுது வருங்கால இளைஞர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருப்பார்கள் என தெரிவித்தார். அதே சமயம் தேசிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநிலங்கள் தேவையானதை ஏற்றுக்கொள்ளலாம் தேவையில்லாததை விட்டு விடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகதாகவும் ஆனால் அதனை எதிர்த்து வேண்டாம் என்பது அரசியல் என விமர்சித்தார்.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.