கோவையில் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு

published 2 years ago

கோவையில் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு

கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வரும், 14-ஆம் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. கோவை ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டடத்தில், அன்று காலை, 10:00 மணி முதல் போட்டி நடைபெறும்.

பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தலைமை ஆசிரியரிடம் இருந்து கட்டாயம் பரிந்துரை சான்று பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதி. ஒரு கல்லூரியில் இருந்து இருவர் அனுமதிக்கப்படுவர்.

குழந்தைகள் தின விழா, ரோஜாவின் ராஜா, ஜவஹர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளில், ஏதேனும் ஒன்றில் பள்ளி மாணவ - மாணவியர் பேச வேண்டும்.

இந்திய விடுதலை போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப்புறா நேரு ஆகிய தலைப்புகளில், ஏதேனும் ஒன்றில் கல்லூரி மாணவ - மாணவியர் பேச வேண்டும். என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe